உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேணுகோபாலசுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேகம்

வேணுகோபாலசுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேகம்

தொடுகாடு: பராசங்குபுரம், ராதா ருக்மணி உடனுறை வேணுகோபால சுவாமி கோவிலில், இன்று, மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.கடம்பத்துார் ஒன்றியம், தொடுகாடு ஊராட்சிக்கு உட்பட்டது பராசங்குபுரம் கிராமம். இங்குள்ள, ஐ.டி.ஐ., காலனியில், ராதா ருக்மணி உடனுறை வேணுகோபாலசுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில், இன்று காலை, 6:00 மணி முதல், 7:30 மணிக்குள், மகா கணபதி ஹோமம், கோ பூஜையுடன் துவங்கி, மகா கும்பாபிஷேகம் நடைபெறும். முன்னதாக, நேற்று மாலை, கலச ஸ்தாபிதம், விக்னேஷ்வர பூஜை, மகா சங்கல்பம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !