உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுவாமி ஊர்வலத்துக்குதடை விதித்து உத்தரவு

சுவாமி ஊர்வலத்துக்குதடை விதித்து உத்தரவு

இடைப்பாடி: இடைப்பாடி அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்னையால், ஸ்வாமியை ஊர்வலமாக எடுத்துச் செல்ல, ஆர்.டி.ஓ., தடை விதித்தார்.இடைப்பாடி தாலுகா, வீரப்பம்பாளையம் பகுதியில் திம்மராய பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில் நிர்வாகத்தை, வீரப்பம்பாளையம், வெள்ளாண்டிவலசு பகுதியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கவனித்து வருகின்றனர். புரட்டாசி மாதம் ஐந்தாம் சனிக்கிழமை பூஜைக்காக, அதற்கு முந்தைய தினமான வெள்ளிக்கிழமை மாலையே, ஸ்வாமியை ஊர்வலமாக எடுத்துச் சென்று, அடுத்தநாள் சனிக்கிழமையன்று, பூஜை செய்வது வழக்கமாக இருந்து வருகிறது.கோவில் நிர்வாக தரப்பினருக்கும், தாசாங்கம் செய்பவர்களுக்கும், கோவில் நிலம் சம்பந்தமாக தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், இரவு நேரத்தில் ஸ்வாமியை அனுப்ப நிர்வாக தரப்பினர் மறுப்பு தெரிவித்தனர்.தாசாங்கம் செய்பவர்கள், சங்ககிரி ஆர்.டி.ஓ.,விடம் புகார் தெரிவித்தனர். அதையடுத்து, இடைப்பாடி தாலுகா அலுவலகத்தில், ஆர்.டி.ஓ., ரங்கநாயகி, சங்ககிரி டி.எஸ்.பி., ராமசாமி, தாசில்தார் மணிமாலா ஆகியோர் தலைமையில், அக் 17 இரவு பேச்சுவார்த்தை நடந்தது.பேச்சுவார்த்தையில் சமாதானம் ஏற்படாததையடுத்து, இரவு நேரத்தில் ஸ்வாமி ஊர்வலம் நடத்தக்கூடாது எனவும், கோவில் சன்னதியில், திம்மராய பெருமாளை தரிசிக்க யாரும் தடை விதிக்கக்கூடாது எனவும், ஆர்.டி.ஓ., உத்தரவிட்டார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !