செஞ்சி சிவன் கோவிலில் அன்னாபிஷேகம்
செஞ்சி: செஞ்சி காமாட்சியம்மன் உடனுரை ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி, மாலை 6 மணிக்கு பஞ்சமூர்த்திகள் மற்றும் காமாட்சியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமும் செய்தனர். இரவு ஏகாம்பரேஸ்வரருக்கு அன்னாபிஷேகம், மகா தீபாராதனை செய்தனர். இரவு 10 மணிக்கு இரண்டாம் கால பூஜை, தீபாராதனை நடந்தது. பூஜைகளை கிரிசங்கர் குருக்கள் செய்தார். கிருஷ்ணாபுரம் சுந்தரவிநாயகர் கோவிலில் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும் செய்து அன்னாபிஷேகம் செய்தனர். மகாதீபாராதனை நடந்தது. முக்குணம் முக்குன்ற நாத உடையார் கோவிலில் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும், அன்ன பிஷேகமும் செய்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை உபயதாரர் திருஞானம், ராணி நிர்வாக குழுவினர் பச்சைவண்ணன், செல்லக்குட்டி, சண்முகம், நாராயணசாமி, பழனி ஆகியோர் செய்திருந்தனர்.