கீதா சாரம்!
ADDED :5327 days ago
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்குமோ அதுவும் நன்றாகவே நடக்கும்
உனக்கு என்ன ஆயிற்று, அதன் பொருட்டு நீ அழுகிறாய்?
நீ எதைக்கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?
நீ எதைப் பெற்றெடுத்தாய் அதை நீ இழப்பதற்கு?
நீ எதை எடுத்துக் கொண்டாயோ அதை
இங்கிருந்து எடுத்துக்கொண்டாய்
எதைக் கொடுத்தாயோ, இங்கேயே கொடுத்தாய்
எது இன்று உனதாக உள்ளதோ
நேற்று வேறொருவருடையதாக இருந்தது
மறுநாள் வேறொருவருடையதாகும்
இதுவே பரிவர்த்தனை வாழ்க்கையின் நியமம் ஆகும்.