கடையம் கோயிலில் திருவாசகம் முற்றோதுதல்
ADDED :4370 days ago
ஆழ்வார்குறிச்சி: கடையம் கைலாசநாதர் பஞ்சகல்யாணி அம்பாள் கோயிலில் 131வது திருவாசகம் முற்றோதுதல் நடந்தது.கடையம் வில்வவனநாதர் திருவாசகம் முற்றோதுதல் குழுவினர் சார்பில் 131வது திருவாசகம் முற்றோதுதல் கடையம் கைலாசநாதர் பஞ்சகல்யாணி அம்பாள் கோயிலில் நடந்தது. பணிநிறைவு தாசில்தார் கல்யாணசுந்தரம் தலைமையில் பல்க் சங்கரலிங்கம் முன்னிலையில் திருவாசகம் முற்றோதுதல் குழுவினர்கள் முற்றோதுதலை நடத்தினர். முற்றோதுதல் வழிபாட்டில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர். முன்னதாக சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.