அக்னீஸ்வர சுவாமி கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா துவக்கம்
திருநெல்வேலி: நெல்லை ராஜவல்லிபுரம் அகிலாண்டேஸ்வரி அம்பிகை சமேத அக்னீஸ்வரர் சுவாமி கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா துவங்கியது. இக்கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 21ம் தேதி துவங்கியது. தினந்தோறும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜையும், சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும் நடக்கிறது. 31ம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. காலை 7 மணிக்கு அம்பாள் தபசு காட்சியும், 10.30 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு காட்சி கொடுத்தல் நிகழ்ச்சியும், இரவு 9 மணிக்கு திருக்கல்யாணமும் நடக்கிறது. இரவு 10 மணிக்கு சுவாமி அம்பாள் திருவீதியுலா நடக்கிறது.மரத் தேர் ; உபயதாரர்களுக்கு அழைப்புஅக்னீஸ்வரர் கோயிலில் மரத் தேர் திருப்பணி செய்ய ரூ.19.50 லட்சத்தில் மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. மரத் தேர் திருப்பணியினை உபயமாக செய்து தர முன்வரும் உபயதாரர்கள் கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.ஏற்பாடுகளை தக்கார் ராதாகிருஷ்ணன் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.