தர்மபுரி தட்சணகாசி கால பைரவர் கோவிலில் சிறப்பு பூஜை!
ADDED :4397 days ago
தர்மபுரி: தர்மபுரி அடுத்த அதியமான்கோட்டை ஸ்ரீதட்சணகாசி கால பைரவர் கோவிலில், அஸ்டமி பெரு விழா சிறப்பு பூஜை நாளை (அக்., 27) நடக்கிறது. இதையொட்டி, நாளை காலை, 6 மணி முதல் ஸ்ரீகால பைவருக்கு அஷ்ட பைரவர் யாகம், அஷ்ட லட்சுமி யாகம், தன்கார்சன குபேர யாகம், அதிருந்ரயாகம் தொடர்ந்து ஸ்வாமிக்கு ராஜ அலங்காரம், 64 வகையான அபிஷேகம், ஆயிரத்து எட்டு அர்ச்சனை, 29 ஆகம பூஜைகள், நான்கு வேத பாராயணம் சிறப்பு உபஜார பூஜைகளை தொடர்ந்து, மங்கள ஆர்த்தி நடக்கிறது. இரவு 10 மணி முதல் காலை, 12 மணி வரை குருதியாகம் நடக்கிறது. ஏற்பாடுகளை தமிழக, ஆந்திரா, கர்நாடகா மாநில பக்தர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர். கோவில் பூஜை தொடர்பாக கோவில் அர்சகர் கிருபாகரன் குருக்கள் மொபைல்ஃபோன் 94432 72066 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.