உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குன்றக்குடி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா துவக்கம்

குன்றக்குடி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா துவக்கம்

குன்றக்குடி: திருவண்ணாமலை ஆதீனத்திற்குச்சொந்தமான  ஆறுமுகச்செவ்வேள் கோயிலில் ஆண்டுதோறும் கந்தர் சஷ்டி திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறுவழக்கம். இந்த ஆண்டு நவம்பர் 3இல் விழா தொடங்குகிறது. அன்று மாலையில் சுவாமி ஆறுமுகச் செவ்வேள் எழுந்தருளலும், சூரபன்மன் எதிரெழுந்து வரல் நிகழ்ச்சி நடைபெறும். அதைத் தொடர்ந்து ஒவ்வொருநாளும் தாரகன், சிங்கமுகன் போன்ற பல்வேறு அவதாரங்களில் சுவாமியை சூரபன்பன் எதிர்கொள்ளல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நவம்பர் 8ஆம் தேதி சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !