உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அழகர்கோவில் கள்ளழகர் கோவிலில் தைலக்காப்பு திருவிழா!

அழகர்கோவில் கள்ளழகர் கோவிலில் தைலக்காப்பு திருவிழா!

அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் தைலகாப்பு திருவிழா சிறப்பானவற்றில் ஒன்றாகும். ஐப்பசி மாதம் நடைபெறும் இந்த திருவிழா நவம்பர் 12–ந் தேதி (செவ்வாய்கிழமை) தொடங்குகிறது. அன்றைய தினம் மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் கோவிலில் சுவாமி புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது. முககிய நிகழ்ச்சியாக 14–ந் தேதி (வியாழக்கிழமை) காலையில் கோவிலிலிருந்து அலங்கரிககப்பட்ட பல்லககில் கள்ளழகர் என்ற சுந்தரராஜ பெருமாள் எழுந்தருள்கிறார். தொடர்ந்து இயற்கை எழில் சூழ்ந்த மலைப்பாதை வழியாக மேளதாளங்கள் முழங்க நுபபுர கங்கைககு சுவாமியின் பல்லககு செல்லும். வழியில் உள்ள கருட ஆழ்வார், அனுமார் ஆகிய தீர்த்த எல்லைகளில் சுவாமிககு தீபாராதனை நடைபெறும். பின்னர் சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவின் உச்சியில் உள்ள நுபபுரகங்கையில் சுவாமி எழுந்தருள்வார். தைலம் சாற்றுதல்: அங்குள்ள மாதவி மண்டபத்தில் சுந்தரராஜ பெருமாளுககு மூலிகை கலந்த திருத்தைலம் சாற்றும் நிகழ்ச்சி நடைபெறும். பின்னர் வற்றாத நீருற்றாக வழிந்து கொண்டிருககும் நுபபுரகங்கை தீர்த்தத்தில் சுவாமியை நீராடுதல் நடைபெறுகிறது. தொடர்ந்து சுவாமிககு சிறப்பு அலங்காரம் அபிஷேகம் தீபாராதனை நடைபெறும். அப்போது ஏராளமான பகதர்கள் அங்கு குவிந்து தரிசனம் செய்வார்கள். பின்னர் ராஜாங்க திருககோலத்தில் சுவாமி புறப்பாடாகி அதே பல்லககு பரிவாரங்களுடன் மலையடிவாரம் சென்று கோவிலுக வந்து சேரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !