உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தென்காசி காசிவிஸ்வநாதர் கோயிலில் தேரோட்டம்!

தென்காசி காசிவிஸ்வநாதர் கோயிலில் தேரோட்டம்!

தென்காசி: தென்காசி காசிவிஸ்வநாதர் கோயிலில் நேற்று ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தேரோட்டம் நடந்தது. தென்காசி காசிவிஸ்வநாதர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையடுத்து தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் சிறப்பு தீபாராதனை நடந்து வருகிறது. தினமும் சொற்பொழிவுகளும் நடந்து வருகிறது. ஓன்பதாம் திருநாளான நேற்று (29ம் தேதி) காலையில் 8.30 மணியளவில் தேரோட்டம் நடந்தது. இதில் தென்காசி மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். முன்னதாக ரதவீதிகளில் உள்ள வீட்டு வாசல்களில் தேர் கோலமிட்டு தேரை வரவேற்றனர். தொடர்ந்து நாளை (31ம் தேதி) காலை 8 மணிக்கு தீர்த்தவாரி, மாலை 5 மணிக்கு தபசுக்காட்சி, இரவு 9 மணிக்கு திருக்கல்யாண திருவிழாவும் நடக்கிறது. விழாவில் தென்காசி போக்குவரத்து துறை ஆர்.டி.ஓ., ராஜசேகர், பிச்சாண்டி செட்டியார் சைக்கிள் டீலர் பழனி, சதிஷ், டாக்டர் மோகன், ராஜாமணி டெக்ஸ்டைல்ஸ் ராஜாமணி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஷமீம், கௌரி ஜூவல்லர்ஸ் முருகன்ராஜ், ரோட்டரி கிளப் மாரிமுத்து, திருப்பதி, மாடசாமி ஜோதிடர், முத்துகுமாரசாமி, செந்தூர்பாண்டி, வைகைகுமார், கவுன்சிலர் சங்கரசுப்பிரமணியன், கோயில் செயல் அலுவலர், தக்கார், கோயில் பணியாளர்கள், பக்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை தென்காசி ஏ.எஸ்.பி., அரவிந்தன் உத்தரவின் பேரில் தென்காசி போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !