திந்திரிணீஸ்வரர் கோவிலில் கேதார கவுரி நோன்பு வழிபாடு
ADDED :4397 days ago
திண்டிவனம்: திண்டிவனம் மரகதாம்பிகை சமேத திந்திரிணீஸ்வரர் கோவிலில் நேற்று கேதார கவுரி விரத சிறப்பு வழிபாடு நடந்தது. திண்டிவனம் சுற்று பகுதிகளில் உள்ள கோவில்களில் நேற்று கேதார கவுரி நோன்பு விழா நடந்தது. சிலர் வீடுகளிலேயே கலசம் வைத்து, நோன்பு விழா நடத்தினர். பாரம்பரியமாக திண்டிவனம் திந்திரிணீஸ்வரர் கோவிலில் நேற்று ஏராளமானோர் நோன்பு எடுத்தனர். முன்னதாக அம்மனுக்கு, நேற்று காலை முதல் மாலை வரை நடந்த சிறப்பு வழிபாட்டில் நூற்றுக்கணக்கான பெண்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு வழிபட்டனர். பூஜைகளை பாலாஜி, கணேசன், முகேஷ் ஆகியோர் செய்து வைத்தனர்.