பிரம்மரிஷி மலைஅடிவாரத்தில் 208 பேருக்கு ஆடைதானம்
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே எளம்பலூரில் உள்ள பிரம்ம ரிஷி மலைச்சாரலில் உள்ள காகன்னை ஈஸ்வரர் கோவிலில் மகா சித்தர்கள் அறக்கட்டளை சார்பில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு நந்திகேஸ்வரர், காகன்னை ஈஸ்வரருக்கு சிறப்பு அபிசேகங்களும், மகா தீபாராதனையும், குபேர லட்சுமி, அஸ்வ, கோபூஜைகள் நடந்தது. இதை முன்னிட்டு 54 சுமங்கலிகளுக்கு ஜாக்கெட் மங்கலப்பொருட்கள், 54 சாதுக்களுக்கு வேட்டி, துண்டு, 70 சிறுவர்கள், 30 சிறுமியருக்கு ஆயத்த ஆடைகள் வழங்கப்பட்டது. மகா சித்தர்கள் அறக்கட்டளை நிறுவனர் அன்னை சித்தர் ராஜ்குமார், மகா சித்தர்கள் அறக்கட்டளை இணை நிறுவனர் ரோகிணிராஜகுமார் முன்னிலையில் அமெரிக்க கலிஃபோர்னியாவை சேர்ந்த யோகாகுரு நந்தி அதிபன்போஸ் மற்றும் சென்னை தொழில்அதிபர் பழனிவேல் ஆகியோர் பங்கேற்று சிறுவர் -சிறுமியருக்கு ஆயத்த ஆடை, பெண்களுக்கு மங்கலப்பொருள், சாதுக்களுக்கு வஸ்திர தானம் வழங்கினர். உலக மக்கள் நலன்கருதியும், ஜீவகாருண்ய சிந்தனை ஓங்கிடவும், பருவமழை தவறாமல் பெய்திடவும் வேண்டி 210 சித்தர்கள் யாகம் மற்றும் தீபாவளிக்காக குபேர லட்சுமி பூஜை நடந்தது. ஆடைதான ஏற்பாடுகளை சிங்கப்பூர் ரத்தினவேல் மற்றும் குருகடாட்சம் மெய்யன்பர்கள் செய்திருந்தனர்.