உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வில்லியனூர் சிவசுப்ரமணியர் கோவிலில் கந்த சஷ்டி விழா

வில்லியனூர் சிவசுப்ரமணியர் கோவிலில் கந்த சஷ்டி விழா

வில்லியனூர்: வில்லியனூர் வள்ளி தேவசேனா சமேத சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா நடந்து வருகிறது. வில்லியனூர் சுந்தரமூர்த்தி விநாயகபுரம் (மேற்கு) பகுதியில் உள்ள வள்ளி தேவசேனா சமேத சிவசுப்ரமணிய கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 3ம்தேதி மாலை சிறப்பு அபிஷேகத்துடன் துவங்கியது. தொடர்ந்து நடந்து வரும் விழாவில், உற்சவதாரர்களால் தினமும் காலையில் சிறப்பு அபிஷேகமும், இரவு 7.00 மணிக்கு மேல் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலாவும் நடந்து வருகிறது. நேற்று (7ம் தேதி) இரவு சிங்கமுக சூரசம்ஹாரம் நடந்தது. இன்று காலை 11.00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், மாலை 6.00 மணிக்கு மேல் சூரசம்ஹாரம் நடக்கிறது. நாளை திருக்கல்யாண உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர், ஊர் மக்கள் மற்றும் கோவில் அர்ச்சகர் பாலசுப்ரமணியன், மணிகண்டன் ஆகியோர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !