அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் தைலக்காப்பு திருவிழா!
ADDED :4450 days ago
அழகர்கோவில்: அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஐப்பசியில் நடக்கும் தைலக்காப்பு திருவிழா நவ., 12ல் துவங்கியது.அன்று நவநீதகிருஷ்ண சுவாமி சன்னதியில் பெருமாள் எழுந்தருளினார். மறுநாள் சீராப்தி நாதன் சேவை நடந்தது. நேற்று காலை சன்னதியில் இருந்து புறப்பட்ட பெருமாள் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருனார். அங்கு தீப ஆராதனை முடிந்து மலைக்கு புறப்பட்டார். வழியில் கருடாழ்வார், அனுமார் தீர்த்தங்களில் தீப ஆராதனை நடந்தது. பகல் 1 மணிக்கு மலை மீது நூபுரகங்கை தீர்த்தத்தில் எழுந்தருளினார். அங்கு பல்வேறு மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட எண்ணெய் சாத்துபடி நடந்தது. பின் நடந்த தீர்த்தவாரியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.