தாடிகொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் லட்சதீப விழா
ADDED :4419 days ago
தாடிக்கொம்பு: கார்த்திகை தீபா விழாவை முன்னிட்டு, தாடிகொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் லட்சதீப சிறப்பு வழிபாடு நடந்தது.நேற்று காலை 7 மணிக்கு திருமஞ்சனமும், மாலை 5.30 மணிக்கு அர்ச்சகர் அழைப்பும் நடந்தது. மாலை 6.30 மணிக்கு சுவாமியுடன் மகா தீப புறப்பாடு நடந்தது. கோயில் முன், மகாதீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து கோயிலை சுற்றி ஒரு லட்சம் கார்த்திகை தீப விளக்குகளை பக்தர்கள் ஏற்றினர். பின், சொக்கபனை கொழுத்தப்பட்டு, வாணவேடிக்கை நிகழ்ச்சி நடந்தது. திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், வேடசந்தூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.