பாசிபட்டினம் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா!
ADDED :4345 days ago
தொண்டி அருகே பாசிபட்டினம் சர்தார் நைனாமுகம்மது தர்காவில், சந்தனக்கூடு திருவிழா நடந்தது.இந்த தர்காவில் 302 ஆம் சந்தனக்கூடு திருவிழா, நவ.4ம் தேதி தலைபிறையும், 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று அதிகாலை 3 மணிக்கு, மின்விளக்குகளால் அலங்கரிக்கபட்ட சந்தனக்கூடு, மாணவநகரிஸ்தானிகன்வயல் கிராமத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு 4 மணிக்கு பாசிபட்டினம் தர்கா வந்தடைந்தது. தர்காவை மூன்று முறைவலம் வந்த பிறகு வாசலில் நிறுத்தபட்டது. மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக பாசிபட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த அனைத்து மதத்தை சேர்ந்த, ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழா நாட்களில் சர்தார்நைனாமுகமது வாழ்க்கை வரலாறு கலைநிகழ்ச்சி, அன்னதானம் நடந்தது. டிச.,4ம் தேதி கொடியிறக்கம் நடைபெறும்.