திருவனந்தபுரம் அனந்தபத்மநாப சுவாமி கோயிலில் லட்ச தீப விழா!
திருவனந்தபுரம்: அனந்தபத்மநாப சுவாமி திருக்கோயில் லட்ச தீப பெருவிழா 20ம் தேதி முறை ஜபத்துடன் கோலாகலமாக ஆரம்பமாகி உள்ளது. இன்று முதல் 56 நாட்களுக்கு கோயிலில் 140 வேத பண்டிதர்கள் ரிக், யஜுர், சாம வேதங்கள் மற்றும் விஷ்ணு சகஸ்ரநாமம், புருஷ சூக்தம் ஆகியவைகளை காலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை ஜபிப்பார்கள். 20.11.13 முதல் 13.1.14 வரை தினமும் மாலை கோயிலில் விஷ்ணு சகஸ்ர நாமம் நடைபெறும். இதில் அனைவரும் கலந்து கொள்ளலாம்.
லட்ச தீபம்: லட்ச தீப பெருவிழா 6 வருடத்திற்கு ஒரு முறை நடைபெறுகிறது. இந்த வருடம் ஜனவரி 14, 2014 தைப்பெங்கல் அன்று நடக்கவிருக்கிறது. இதற்காக சுமார் 200 வேத பண்டிதர்கள் வந்துள்ளார்கள். இதனையடுத்து கோயில் நிர்வாகம், பக்தர்களுக்கு சிறப்பான ஏற்படுகள் செய்துள்ளார்கள். இந்த லட்ச தீப பெருவிழாவையொட்டி நவம்பர் 27 அன்று சேஷ வாகனமும், டிசம்பர் 5 அன்று கமல வாகனமும், டிசம்பர் 13 அன்று இந்திர வாகனம், டிசம்பர் 21 அன்று பல்லாக்கு, டிசம்பர் 29 அன்று இந்திர வாகனம், ஜனவரி 6 2014 பல்லாக்கு, கடைசி நாளான ஜனவரி 14 அன்று கருட வாகனத்தில் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். ஜனவரி 14 அன்று கோயிலில் லட்ச தீப பெருவிழா நடைபெறும்.