ராமானுஜர் கோவிலில் திருவாதிரை விழா!
ADDED :4349 days ago
காஞ்சிபுரம்: செவிலிமேடு ராமானுஜர் கோவிலில், திருவாதிரை விழா நடந்தது. திருவாதிரையையொட்டி நேற்று சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்கள் அங்கபிரதட்சணம் செய்தனர். காலை 10:00 மணிக்கு மூலவருக்கு திருமஞ்சனம் நடந்தது. பின் சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பகல் 12:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ராமானுஜர் பக்தர் குழு சார்பில் ராமானுஜ கவசம் பாடப்பட்டது.