உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சின்னசேலம் சிவன் கோவில்களில் சனி மகா பிரதோஷ வழிபாடு

சின்னசேலம் சிவன் கோவில்களில் சனி மகா பிரதோஷ வழிபாடு

சின்னசேலம்: சின்னசேலம் பகுதி சிவன் கோவில்களில் சனி மகாபிரதோஷ வழிபாடு நடந்தது. சனி மகாபிரதோஷமான நேற்று முன்தினம் சின்னசேலத்தில் ஒரு லட்சம் ருத்ராட்சங்களால் கருவறை கொண்ட சின்னசேலம் கங்காதீஸ்வரர் கோவிலில் மூலவர் சுவாமிக்கு அர்த்தநாரீஸ்வரர் அலங்காரம் செய்து நந்திகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். தென்பொன்பரப்பி சொர்ணாம்பிகை சமேத சொர்ணபுரீஸ்வர் கோவிலில் மூலவருக்கு அண்ணா மலையார் அலங்காரம், நந்தீஸ்வரருக்கு அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. ராயர்பாளையம் குமாரதேவர் மடம் பழமலைநாதர் கோவில், கூகையூர் பெரியநாயகி உடனுரை சொர்ணபுரீஸ்வரர் கோவில், அசலகுசலாம்பிகை சமேத பஞ்சாட்சர நாதர் கோவில்களிலும் சனி மகா பிரதோஷ வழிபாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !