உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பனையூர் ஜீவசமாதியில் 10ல் குருபூஜை

பனையூர் ஜீவசமாதியில் 10ல் குருபூஜை

திருவேங்கடம்: பனையூர் ஜீவசமாதி ஒடுக்க அதிஷ்டானத்தில் டிசம்பர் 10 மற்றும் 14 ஆகிய நாட்களில் குரு பூஜை விழா நடக்கிறது. சங்கரன்கோவில் தாலுகா பனையூர் ஜீவ சமாதி ஒடுக்க அதிஷ்டானத்தில் டிசம்பர் 10ம் தேதி ஸ்ரீமத் சற்குரு சங்கரநாராயண சுவாமியின் 178ம் ஆண்டு குரு பூஜையும், 14ம் தேதி ஸ்ரீமத்சற்குரு தெக்ஷ்ணா மூர்த்தி சுவாமிகள் 123ம் ஆண்டு குரு பூஜையும் நடக்கிறது. டிசம்பர் 10ம் தேதி காலை 7 மணிக்கு சங்கரநாராயண சுவாமிக்கு அபிஷேகம், நண்பகல் 12 மணிக்கு புஷ்ப அலங்காரம் தீபாராதனை மதியம் 2 மணிக்கு மகேஸ்வர பூஜை அன்னதானம் நடக்கிறது. டிசம்பர் 14ம் தேதி காலை 7 மணிக்கு தெக்ஷ்ணாமூர்த்தி சுவாமிகளுக்கு அபிஷேகம், மதியம் 12 மணிக்கு புஷ்ப அலங்காரம், தீபாராதனை 2 மணிக்கு மகேஸ்வர பூஜை, அன்னதானம் நடக்கிறது. ஏற்பாடுகளை பனையூர், ஸ்ரீ ராம.ச.தெ.ஒடுக்கம் பொறுப்பாளர் வேலுச்சாமி செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !