உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தீபத் திருவிழா முடிந்ததை முன்னிட்டு பரிகார பூஜை

தீபத் திருவிழா முடிந்ததை முன்னிட்டு பரிகார பூஜை

திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழா முடிந்ததை முன்னிட்டு, பரிகார பூஜை நடத்தப்பட்டது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், கார்த்திகை தீப விழா, நவம்பர், 8ம் தேதி, கொடியேற்றத்துடன் தொடங்கி, 10 நாட்கள் நடந்தது. இதில், முக்கிய விழாவாக, கடந்த, 17ம் தேதி, 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில், மஹா தீபம் ஏற்றப்பட்டது. இதைக்காண, லட்சக்கணக்கான பக்தர்கள், மலை உச்சிக்குச் சென்று தரிசித்து வந்தனர். மஹா தீபம் ஏற்றப்படும் மலையையே சிவனாக நினைத்து வழிபட்டு வருவதால், மலை மீது பக்தர்கள் ஏறிச் சென்றதற்காக பரிகார பூஜை நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல், இந்த ஆண்டும், தீப திருவிழாவை சிறப்பாக நடைபெற்றதை முன்னிட்டு, அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பரிகார பூஜை நடத்தப்பட்டது. ன்னர், கலச நீரை, கோவில் வளாகம் முழுவதும் தெளிக்கப்பட்டது, மேலும் கலச நீரை, 2,668 அடி உயரமுள்ள மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு அண்ணாமலையார் திருப்பாதத்துக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !