வைகை ஆற்றில் ஐயப்ப சுவாமிக்கு ஆராட்டு!
ADDED :4351 days ago
சோழவந்தான்: சோழவந்தான் தென்கரை வைகை ஆற்றில் ஐயப்பசுவாமிக்கு ஆராட்டு விழா நடந்தது. தென்கரை சாஸ்தாஐயப்பன் கோயிலில் கார்த்திகை உற்சவத்தையொட்டி நேற்று பொங்கல் படைத்து யாகசாலை பூஜைகள், தீபாரதனைகள் நடந்தன. பின் ஐயப்பசுவாமி யானை மீது ஊர்வலமாக வைகை ஆற்றில் எழுந்தருளினார். அங்கு ரவிசுப்பிரமணியம் சிவாச்சாரியார் ஐயப்பனுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகங்களை செய்தார். வானத்தில் கருடன் வட்டமிட பக்தர்கள் சரணகோஷம் முழங்க ஆராட்டு நிகழ்ச்சி நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஐயப்ப சேவா சங்க கிளை பக்தர்கள் செய்தனர். சோழவந்தான் ஐயப்பசுவாமி கோயிலிலும் ஆராட்டு விழா நடந்தது.