ராமநாதபுரம் அருகே சேதுக்கரை அனுமார் கோயில்: கடல் அரிப்பில் மூழ்கும் அபாயம்!
                              ADDED :4341 days ago 
                            
                          
                           ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணியில் இருந்து 5 கி.மீ. தூரத்தில் சேதுக்கரை உள்ளது. இங்கு புகழ்பெற்ற அனுமார் கோயில் உள்ளது. இங்குள்ள கடல் ரத்னாகர தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது. சித்திரை, பங்குனி மாதங்களில் கோயில் திருவிழாக்கள் நடைபெறும். மேலும் மாதந்தோறும் அமாவாசை தினத்தன்று சேதுக்கரையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு பிதுர் தர்ப்பணம் செய்கிறார்கள். அதேபோன்று ராமேஸ்வரம் வரும் பக்தர்கள் சேதுக்கரை அனுமார் கோயிலை தரிசிப்பதும் உண்டு. சேதுக்கரை தற்போது கடல் அரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ளது. கடற்கரை ஓரங்களில் இருந்த பனை, தென்னை மரங்கள் வேறொடு கடல் நீரில் சாய்ந்துள்ளன. இதேநிலை நீடித்தால், சில ஆண்டுகளில் சேதுக்கரை அனுமார் கோயில் கடலுக்குள் மூழ்கும் அபாயம் உள்ளது.