நடராஜர் கோவிலில் இன்று தெருவடைச்சான் உற்சவம்!
ADDED :4333 days ago
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில், மார்கழி ஆருத்ரா மகா தரிசனம் உற்சவத்தையொட்டி, தெருவடைச்சான் சப்பரம் உற்சவம், இன்று இரவு நடக்கிறது. கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில், மார்கழி ஆருத்ரா தரிசன விழா, 9ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. 5ம் நாள் விழாவான, தெருவடைச்சான், இன்று இரவு நடக்கிறது. இதையொட்டி, 5 மீ., அகலத்திற்கு தேர் கட்டப்பட்டு, வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெருவடைச்சான் சப்பரத்தில், சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜர் சுவாமி, வெள்ளி ரிஷப வாகனத்தில், நான்கு ரத வீதி உலா நடைபெறும்.