கொழுந்து மாமலை கோயிலில் இன்று சிறப்பு வழிபாடு
ADDED :4326 days ago
தென்காசி: சேரன்மகாதேவி கொழுந்து மாமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று (13ம் தேதி) கடைசி வெள்ளி சிறப்பு வழிபாடு நடக்கிறது. சேரன்மகாதேவி கொழுந்து மாமலை அடிவாரத்தில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளி சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது. இந்நிலையில் கார்த்திகை மாதம் கடைசி வெள்ளியான இன்று (13ம் தேதி) காலை 10.30 மணியளவில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடக்கிறது. மேலும் பக்தர்கள் வசதிக்காக அரசு சிறப்பு பஸ்சும் இயக்கப்படுகிறது. இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை கோயில் திறந்திருக்கும்.