உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஐயப்ப சுவாமிக்கு தர்மசாஸ்தா பூஜை

ஐயப்ப சுவாமிக்கு தர்மசாஸ்தா பூஜை

புதுச்சேரி: ஆந்திர மகா சபாவில் ஐயப்ப சுவாமிக்கு இரண்டாம் ஆண்டு தர்மசாஸ்தா பூஜை நடந்தது.மொரட்டாண்டி நவக்கிரக பரிகார ஷேத்திரத்தில் உள்ள தர்மசாஸ்தா (ஐயப்பன்) சுவாமிக்கு, புதுச்சேரி ஆந்திர மகா சபாவில் சிறப்பு பூஜைக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது. விழாவையொட்டி, நேற்று காலை 4.30 மணிக்கு சுப்ரபாதம், 5.00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை மற்றும் கணபதி ஹோமம், 7.00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 8.30 மணிக்கு மகா தீபாராதனை, 9.30 மணிக்கு புஷ்பாஞ்சலி, 11.00 மணிக்கு சக்தி ஐயப்ப பக்த ஜனசபாவின் பஜனை ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. மதியம் 12.30 மணிக்கு தீபாராதனை, 1.30 மணிக்கு மூல மந்திர ஜபம், மாலை 5.00 மணிக்கு தன்வந்தரி நகர் சஞ்சீவி விநாயகர் கோவில் ஐயப்ப பக்தர்கள் குழுவின் பஜனை நடந்தது. 6.30 மணிக்கு 108 சரணக் கோவைகளுடன் படி பூஜை மற்றும் மகா தீபாராதனை நடந்தது.இரவு 8.30 மணிக்கு ஹரிவராகசணம் நடந்தது. விழாவில் ஐயப்ப பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !