உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாய்பாபா கோயிலில் இன்று சிறப்பு பூஜை

சாய்பாபா கோயிலில் இன்று சிறப்பு பூஜை

விருதுநகர்: விருதுநகர், மீசலூரில், ஸ்ரீ ஷீரடி சாய்பாபா கோயில் உள்ளது. இங்கு, இன்று மதியம் 1 மணி முதல் இரவு 9. 05 வரை, ஸ்ரீ சத்ய நாராயண விரத பூஜை, புனித கலசங்களுடன் நடக்கிறது. இது, திங்கட்கிழமை பக்தியுடன் கடைபிடிக்கும் புனித பூஜை என்பதால், பக்தர்களுக்கு வரப்பிரசாதமாகும். சாய்பாபாவின் முன் விழ்ந்து, அவர் பாத கமலங்களை பற்றி கொண்டு, பிரார்த்தனை செய்யலாம். விவசாயம், கால்நடைகள் செழித்து அபிவிருத்தி அடையவும், தொழில் வளம் அடையவும், கிராமங்களில் நல்ல மழை பொழிந்து குடிநீர் பஞ்சம் நீங்கவும், திருமண தடங்கல், சந்தான பாக்யம் இல்லாமை, வறுமை, வேலைவாய்ப்பின்மை, வேலை பார்க்கும் இடத்தில் பிரச்னை உட்பட அனைத்து ஆழ்நிலை துயரங்களும் விலகி தெய்வ அனுகூலம், லட்சுமி மற்றும் சகல ஐஸ்வர்யம் ஏற்பட இப்பூஜை நடக்கிறது. இதில், சாய்பாபா பக்தர்கள் குடும்பத்துடன் வந்து இறைவனின் அருளை பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !