உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோவிலூர் ஞானானந்தா தபோவனத்தில் 40வது ஆராதனை விழா

திருக்கோவிலூர் ஞானானந்தா தபோவனத்தில் 40வது ஆராதனை விழா

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், ஞானானந்த தபோவனத்தில், ஞானானந்தகிரி சுவாமிகளின் 40 வது ஆராதனை விழா நடந்தது. விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர், ஞானானந்தகிரி சுவாமிகள் தபோவனத்தில் சுவாமிகளின் 40 வது ஆராதனை விழா கடந்த 5ம் தேதி துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியாக, தினசரி பாத பூஜைகள், ஹோமம், பாராயணம், அகண்டதாரா நாம ஜபம், பரனூர் கிருஷ்ணப் பிரேமி சுவாமிகளின் உபன்யாசம் நடந்தது. நேற்று காலை 5:30 மணிக்கு விசேஷ பாதபூஜை, லட்சார்ச்சனை பூர்த்தி, விசேஷ அதிஷ்டான பூஜை, அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. பகல் 1.30 மணிக்கு ஆராதனை, தீர்த்த நாராயண பூஜைகள் நடந்தது. இரவு 7:30 மணிக்கு ஸ்ரீமதி ரஞ்சனி, குமாரிபிரியதர்ஷினி சகோதரிகளின் இன்னிசை கச்சேரி நடந்தது. விழா ஏற்பாடுகளை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் சுப்புராமன் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !