புவனேஸ்வரர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா
ADDED :4420 days ago
விக்கிரவாண்டி;விக்கிரவாண்டி புவனேஸ்வரர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது.புவனேஸ்வரர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி லிங்கத்திற்கும், புவனேஸ்வரி அம்மனுக்கும் அபிஷேகம் நடந்தது. உற்சவர் புவனேஸ்வரி அம்மனோடு நந்தி வாகனத்தில் பக்தர்களுக்கு கோபுர தரிசன காட்சியளித்தார்.பூஜைகளை சின்னதச்சூர் சங்கர் குருக்கள் செய்தார். பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.விழா ஏற்பாடுகளை உபயதாரர் டாக்டர் பிருந்தா, ரமேஷ், ரவி, சீனுவாசன், தர்மகர்த்தா சுப்புராயலு, குமாரசாமி செய்திருந்தனர்.