ஊட்டி ஹெத்தையம்மன் திருவிழா கோலாகலம்!
ADDED :4409 days ago
ஊட்டி: அருவங்காடு அருகே, ஜெகதளாவில் ஹெத்தையம்மன் திருவிழா கோலாகலமாக நடந்தது. நீலகிரி மாவட்டத்தில், படுகரின மக்களின், ஹெத்தையம்மன் திருவிழா கடந்த ஒரு மாதமாக, பல்வேறு கிராமங்களில் நடந்து வருகிறது. இதன் ஒருபகுதியாக, காரக்கொரையில் "பூ குண்டம் திருவிழா நடந்தது. ஜெகதளா, காரக்கொரை, பேரட்டி, மேல் பிக்கட்டி, கீழ் பிக்கட்டி, மஞ்சுதளா, மல்லிக்கொரை, ஓதனட்டி கிராம மக்கள் பங்கேற்றனர். நேற்று ஜெகதளாவில் ஹெத்தையம்மன் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில், ஆயிரக்கணக்கான படுகரின மக்கள் வெண்ணிற ஆடையுடன், பாரம்பரிய பாடல்கள் பாடி, அம்மனை ஊர்வலமாக எடுத்து வந்தனர். மாவட்டத்தில் உள்ள படுகர் கிராமங்களை சேர்ந்த மக்கள் திரளாக பங்கேற்றனர்.