உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அபயஹஸ்த ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி டிச.,30ல் துவக்கம்

அபயஹஸ்த ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி டிச.,30ல் துவக்கம்

ராசிபுரம்: ராசிபுரம் அபயஹஸ்த ஆஞ்சநேயர் கோவிலில், ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா, டிசம்பர், 30ம் தேதி, துவங்குகிறது. அன்றிரவு, 7 மணிக்கு, ஸ்வாமிக்கு பால் அபிஷேகம் நடத்தப்பட்டு, வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்யப்படும். டிசம்பர், 31ம் தேதி, காலை, 7 மணிக்கு, மேல் ராமர் பாதம் மற்றும் நவ மாருதி ஸ்வாமிக்கு திருமஞ்சனம் அபிஷேகம் நடக்கிறது. மாலை, 6 மணிக்கு, விஷ்வக்ஷேன ஆராதனை, கலச ஆவாஹணம், ஆஞ்சநேய ஸகஸ்ரநாம அர்ச்சனை நடக்கிறது. ஜனவரி, 1ம் தேதி, அதிகாலை, 4 மணிக்கு, மேல் வேத பாராயணம், சுதர்சன, அஷ்டலட்சுமி, குபேர, தன்வந்திரி, காயத்ரி மற்றும் ஆஞ்சநேய மூல மந்திர ஹோமங்கள், தீபாரதனை, மேல் மூலவர் மற்றும் உற்சவர் ஸ்வாமிக்கு விசேஷ திருமஞ்சன அலங்காரம் செய்யப்படும். மாலை, 6 மணிக்கு மேல், உற்சவர் ஸ்வாமி, திருவீதி உலா வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !