நிறைவு பெற்றது சென்னையில் திருவையாறு!
சென்னை: கடந்த எட்டு நாட்களாக நடந்த, "சென்னையில் திருவையாறு இசை நிகழ்ச்சி, நேற்றுடன் நிறைவு பெற்றது. ஒவ்வொரு ஆண்டும், மார்கழி மாதத்தில், சென்னையில் பல்வேறு இசை நிகழ்ச்சிகள்கள் நடப்பது, வழக்கம். அதில், சென்னையில் திருவையாறு இசை நிகழ்ச்சியும் ஒன்று. கடந்த வாரம் புதன்கிழமை துவங்கிய நிகழ்ச்சியில், பிரபல கதக் நடன கலைஞர், பிர்ஜு மகாராஜ், நடிகர் கமல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். எட்டு நாட்கள் நடந்த இசை நிகழ்ச்சியில், 52 கர்நாடக இசை கலைஞர்கள் பங்கேற்றனர். தினந்தோறும், நாம சங்கீர்த்தனம், பரதநாட்டியம், பாட்டு, சாக்ஸபோன், வீணை, கிடார், உபன்யாசம், நடனம் உள்ளிட்ட இசை நிகழ்ச்சிகள், காலை, 7:30லிருந்து, இரவு,7:30 வரை நடந்தன. தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களில் இருந்து, இசை ஆர்வலர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி, நேற்றோடு நிறைவு பெற்றது.