அருணாசலேஸ்வரர் கோயிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு!
ADDED :4342 days ago
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோயிலில், நேற்று நடைபெற்ற பிரதோஷ சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதையொட்டி கோயில் ஆயிரம் கால் மண்டபம் அருகே உள்ள பெரிய நந்தி, கோயில் கொடி மரம் அருகே உள்ள நந்தி, மூலவர் சன்னதி எதிரே உள்ள நந்தி மற்றும் கோயிலின் பல்வேறு இடங்களில் உள்ள 8-க்கும் மேற்பட்ட நந்திகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.