உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வரதராஜ பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் 11ல் திறப்பு

வரதராஜ பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் 11ல் திறப்பு

பொள்ளாச்சி : பொள்ளாச்சி வரதராஜப்பெருமாள் கோவிலில், சொர்க்க வாசல் திறப்பு விழா வரும் 11ம் தேதி நடைபெறுகிறது.பொள்ளாச்சி கரிவரதராஜப்பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி திருவிழாவையொட்டி, வரும் 10ம் தேதி முதல் துவங்கி 12ம் தேதி வரை மூலஸ்தானத்தில் மூலவருக்கு முத்தங்கி சேவை நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான, சொர்க்க வாசல் திறப்பு விழா வரும் 11ம் தேதி நடக்கிறது; அதிகாலை 2:00 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை பூஜைகளும்; காலை 4:00 மணிக்கு மேல் 5:00 மணிக்குள் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. சொர்க்க வாசலில், கட்டுவதற்கு காய், கனிகள் மற்றும் திரவிய பொருட்கள் அனைத்தும் வரும் 10ம் தேதி காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை கோவிலில் வழங்கலாம் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் வெண்மணி, தக்கார் அனிதா ஆகியோர் செய்து வருகின்றனர்.ஜமீன் ஊத்துக்குளிஜமீன் ஊத்துக்குளி கரிவரதராஜப்பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி திருவிழா வரும் 11ம் தேதி நடைபெறுகிறது. விழாவையொட்டி, காலை 5:00 மணிக்கு பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுத்தலைவர் அருண்குமார் காளிங்கராயர், விழாக்குழுவினர், கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !