கள்ளக்குறிச்சியில் பகல் பத்து உற்சவம்!
ADDED :4333 days ago
கள்ளக்குறிச்சி: தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோவிலில் பகல் பத்து உற்சவம் புதன்கிழமை தொடங்கியது. வைகுண்ட ஏகாதசி வரும் ஜன.11ம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு, இக்கோவிலில் பகல் பத்து, ராப்பத்து உற்சவம் நடைபெறுகின்றன. தினமும் மாலை பெருமாள் கோயிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.