சோமேஸ்வரர் மலையடிவார பிள்ளையார் கோவிலில் தாக சாந்தி
ADDED :4310 days ago
பள்ளிப்பட்டு: மது பிரியர்களால் கோவில் மண்டபம் சீரழிந்து வருகிறது. இதனால், பக்தர்கள் மன வேதனை அடைந்துள்ளனர். பள்ளிப்பட்டு அடுத்த, வெளியகரம் கிராமத்தின் வடக்கு எல்லையில், சோமேஸ்வரர் மலையடிவாரத்தில் பிள்ளையார் கோவில் உள்ளது. நுாற்றாண்டு பழமை வாய்ந்த இந்த கோவிலுக்கு, மதில் சுவர் இல்லை. ஊருக்கு ஒதுக்குபுறமாக உள்ளதால், மது பிரியர்கள், இரவு நேரத்தில் கோவில் மண்டபத்தை ஆக்கிரமிக்கின்றனர். மது அருந்துவது, மாமிச துண்டுகளை அங்கே வீசி விட்டு செல்வது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால், கோவிலை சுற்றிலும் காலி மது பாட்டில்களும், பிளாஸ்டிக் கவர்களும் சிதறிக் கிடக்கின்றன. இதனால், பக்தர்கள் மன வேதனை அடைந்துள்ளனர். கோவிலை சுற்றிலும் கம்பி வேலி அமைக்கவும், மின் விளக்கு பொருத்தவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.