உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெருமாள் கோவில்களில் துவாதசி தீபாராதனை

பெருமாள் கோவில்களில் துவாதசி தீபாராதனை

சேலம்: சேலத்தில் உள்ள பெருமாள் கோவில்களில், துவாதசி ததியாராதனையில், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். பெருமாள் கோவில்களில், வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. சேலம், அழகிரிநாத ஸ்வாமி பெருமாள் கோவிலில், நேற்று அதிகாலை, 6 மணிக்கு துவாதசி ததியாராதனை விழா நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, பிரசாதம் சாப்பிட்டனர். சேலம், செவ்வாய்ப்பேட்டை, பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில், ஸ்ரீஆதி பெருமாள் பக்த கைங்கர்ய சபா சார்பில், ஆயிரக்கணக்கான மக்கள் துவாதசி ததியாராதனை விழாவில் பங்கேற்றனர். சேலம், பட்டைக்கோவில் பிரசன்ன வரதராஜ பெருமாள் கோவில், பிரசன்ன வெங்கடாஜலபதி பாண்டுரங்கன் கோவில், சவுந்தரராஜ பெருமாள் உள்பட பல கோவில்களில் துவாதசி ததியாராதனை நடந்தது. கன்னிகாபரமேஸ்வரி கோவில் சார்பாக, வாசவி மஹாலில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் துவாதசி ததியாராதனையில் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !