மாட்டுப்பொங்கல் விழா கோலாகல கொண்டாட்டம்
பெரம்பலூர்: தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமம் சார்பில் மாட்டுப்பொங்கல் விழா கோலாகல கொண்டாட்டப்பட்டது.பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமங்களின் சார்பில், மாட்டுப்பொங்கல் விழா நேற்று கல்லூரி வளாகத்தில் உள்ள மாட்டு பண்ணையில் நடந்தது.விழாவுக்கு தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமங்களின் தாளாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். செயலாளர் நீல்ராஜ், துணை தலைவர்கள் கதிரவன், அனந்தலட்சுமி கதிரவன், இயக்குனர்கள் மணி, பூபதி, நிர்வாக அலுவலர் ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாடுகள் குளிப்பாட்டப்பட்டு பொட்டு வைத்து அலங்கரிக்கப்பட்டிருந்தது. சர்க்கரை பொங்கல், சுண்டல், கரும்பு, மஞ்சள், வாழைப்பழம், தேங்காய் மற்றும் பூஜை பொருட்கள் வைத்து படைக்கப்பட்டு பண்ணையிலிருந்த மாடுகள் மற்றும் அவற்றின் கன்றுக்குட்டிகளுக்கு தாளாளர் சீனிவாசன் பொங்கல் ஊட்டினார்.இந்த விழாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள், தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் பணியாற்றும் ஊழியர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர். பங்கேற்ற அனைவருக்கும் கரும்பு, பொங்கல், வாழைப்பழம், தேங்காய் உள்ளிட்டவைகளை தாளாளர் சீனிவாசன் வழங்கினார்.