சாய்பாபா கோவிலில் திருவிளக்கு பூஜை
ADDED :4304 days ago
கரூர்: சேவா சங்கம் சார்பில், சாய்பாபா கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.கரூர் மாவட்ட சீரடி சாய்பாபா சேவா சங்கம் சார்பில், சிறப்பு திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்று தீபவழிபாடு செய்தனர்.நிகழ்ச்சியில் மாவட்ட சேவா சங்கத்தலைவர் கார்த்திகேயன் மதி, செயலாளர் ராஜா, நீலகண்ட பசுபதி, உறுப்பினர்கள் பாலாஜி, சரவணன், ரத்தினகிரி, சுரேஷ், சேவா சமாஜத்தின் டிரஸ்டிகள் ராமச்சந்திரன், ராஜேந்திரன், ஆறுமுகம், பாபா, சிவகுமா உட்பட பலர் பங்கேற்றனர்.