திருப்பரங்குன்றம் உண்டியல் காணிக்கை ரூ.19.60 லட்சம்!
ADDED :4378 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் உண்டியல்கள் எண்ணப்பட்டன. கோயிலில் 30 நிரந்தர உண்டியல்கள் உள்ளன. துணை கமிஷனர் பச்சையப்பன் முன்னிலை வகித்தார். காணிக்கை எண்ணும் பணியில் சுப்பிரமணியசாமி தேவஸ்தான பள்ளி மாணவிகள் ஈடுபட்டனர். ரூ.19, 60,646 மற்றும் 102 கிராம் தங்கம், 686 கிராம் வெள்ளி காணிக்கையாக பெறப்பட்டன.