மருத்துவமனையில் ஜெயேந்திரர் அனுமதி!
ADDED :4269 days ago
சென்னை: காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜெயேந்திரர், உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜெயேந்திரர், ஆந்திர மாநிலம், நெல்லுாரில் தங்கியிருந்தார். இந்த நிலையில், அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால், அவர் நெல்லுாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று இரவு, 9:00 மணி நிலவரப்படி அவர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறப்பட்டது.ஜெயேந்திரர் குறைந்த ரத்த அழுத்ததால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இப்போது அவர் உடல்நிலை சீராக உள்ளது என, காஞ்சி மடம் வட்டாரங்கள் தெரிவித்தன.