ராஜபாளையம் சொக்கர் கோயில் கும்பாபிஷேகம்
ராஜபாளையம்: ராஜபாளையம் தென்காசி ரோட்டில் உள்ள, சொக்கர்கோயில் கும்பாபிஷேகம், நேற்று நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கோயிலில் சொக்கர், மீனாட்சி அம்மன், கொடி மரத்திற்கு, தங்க கவசம் உட்பட 1.5 கோடி ரூபாயில், திருப்பணிகள் நடந்தன. பிப்., 6ல், மங்கள இசை, விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. இதனை தொடர்ந்து, சிறப்பு யாக பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. நேற்று காலை 10.35 மணிக்கு, ராம்கோ குரூப்சேர்மன் பி.ஆர்.ராமசுப்பிரமணிய ராஜா தலைமையில், கும்பாபிஷேகம் நடந்தது. அவரது மனைவி சுதர்சனம், ராம்கோ குரூப் துணைத்தலைவர் பி.ஆர்.வெங்கட்ராம ராஜா, தருமபுர ஆதினம் மவுனகுமாரசாமி தம்பிரான், பழனி சாது திருமட சாது சண்முக அடிகளார் கலந்துகொண்டனர். பிள்ளையார்பட்டி பிச்சை சிவாச்சாரியார் கும்பாபிஷேகம் செய்தார். புனிதநீர் பக்தர்கள் மேல் தெளிக்கப்பட்டது. நமசிவாய கோஷத்துடன் அவர்கள் தரிசனம் செய்தனர். விழாவில், ராம்கோ குரூப் நிறுவன ஊழியர்கள், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.