பாமா ருக்மணி சமேத கிருஷ்ணமூர்த்தி சுவாமி கோயில் கும்பாபிஷேகம்
பரமக்குடி: பரமக்குடி அருகே பகைவென்றி கிராமத்தில் பாமா ருக்மணி சமேத கிருஷ்ணமூர்த்தி சுவாமி கோயில், முளைக்கொட்டு திண்ணை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. பிப்., 8ல் மாலை 4 மணிக்கு காப்புக்கட்டுதலுடன் விழா துவங்கியது. நேற்று (பிப்., 10) காலை 7 மணிக்கு நான்காம் கால யாகபூஜைகள் நடந்து, 8.45 மணிக்கு கடம் புறப்பாடானது. காலை 9.45 மணிக்கு, வேத, மந்திரங்கள் முழங்க சத்யநாராயணன், ஸ்ரீதரன், மாலோலஸ்ரீநிவாசன் ஆகிய பட்டார்ச்சாரியார்கள் கும்பாபிஷேகத்தை நடத்தினர். தொடர்ந்து பெருமாளுக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் நடந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பகைவென்றி ஊராட்சி மன்ற தலைவர் பழனிச்சாமி, நாகராஜ், சுப்பிரமணியன், சேகர், கமிஷன்கடை முருகேசன் மற்றும் பகைவென்றி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர். சத்திரக்குடி: போகலூர் ஒன்றியம் துரத்தியேந்தல் வெள்ளுருடைய அய்யனார், கருப்பணசுவாமி கோயிலில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கிராம மக்கள், கருப்பணசுவாமி மகளிர் மன்றத்தினர் செய்தனர்.