உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்!

பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்!

கன்னிவாடி: திண்டுக்கல் மாவட்டம் புளியராஜக்காபட்டி மகாலட்சுமி கோயிலில், பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்த நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.  குட்டத்துப்பட்டி அருகே புளியராஜக்காபட்டியில், மகாலட்சுமி, 121 கன்னிமார் கோயில் விழா நடந்தது. விரதமிருந்த பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். காலையில் ஆற்றில் இருந்து, தெய்வீகப்பெட்டி அழைப்பு நடந்தது. அம்மனுக்கு விசேஷ அலங்காரம் செய்யப்பட்டது. கோயில் கொடிமரம் முன் அமர்ந்திருந்த பக்தர்களை, சேர்வை ஆட்டக் குழுவினர் குழல், தப்பாட்டத்துடன் வலம் வந்தனர். சிறப்பு பூஜைகளுக்குப்பின், கொடிமர தீபம் ஏற்றினர். அப்போது கருடன், கோயிலை வட்டமிட்டது.  பூசாரி பொன்னையா பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்தனர். மாலையில், பாப்பாத்தி அம்மன் கோயில் அருகே, அனைத்து சமுதாயத்தினர் சார்பில் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !