மதுரை முக்தீஸ்வரர் கோயிலில் தேர்வில் வெற்றிபெற கல்விக்கான ஹோமம்!
ADDED :4286 days ago
மதுரை: தெப்பக்குளத்தின் மேற்கு கரையில் அமைந்துள்ள மரகதவல்லி சமேத முக்தீஸ்வரர் கோயிலில் கல்விக்கான ஹோமம் நடந்தது. வருகிற மார்ச் மாதம் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஆரம்பமாகிறது. இதில் தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களும் அதிக மதிப்பெண் பெறுவதற்காக தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயிலின் பிரகாரத்தில் உள்ள கல்விக்கடவுளான தட்சிணாமூர்த்தியின் முன்பு கல்வி ஹோமம் நடைபெற்றது. இந்த ஹோமத்தினால் மாணவர்களுக்கு நன்கு படிக்கும் திறனும், ஞாபக சக்தியும் கிடைக்கும் என்பது நம்பிககை. இந்த ஹோமத்தை மதுரை மீனாட்சி அம்மன் கோயில் இணை ஆணையரின் துணைவியார் துவக்கி வைத்தார். ஹோமத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் பெண்கள் மேலநிலைப்பள்ளியை சேர்ந்த ஏராளமான மாணவிகளும், ஆசிரியைகளும் கலந்து கொண்டனர்.