உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அறநிலையத்துறை இடங்களில் ஆக்கிரமிப்பு அகற்றம்!

அறநிலையத்துறை இடங்களில் ஆக்கிரமிப்பு அகற்றம்!

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் அறநிலையத்துறை இடங்களில் இருந்த ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் நேற்று அகற்றினர்.  ராஜபாளையம்-மதுரை ரோட்டில் அறநிலையத்துறையை சேர்ந்த மாயூரநாதசுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்பு மற்றும் வாடகை பாக்கியால் சில கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, சிவகங்கையில் உள்ள மண்டல அறநிலையத்துறை கமிஷனர் உத்திரவுப்படி, ராஜபாளையத்தில் இந்த கோயிலுக்கு சொந்தமான 26 இடங்களில் இருந்த ஆக்கிரமிப்பாளர் மற்றும் வாடகை பாக்கி உள்ளவர்களுக்கு, ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பினர். நேற்று, உதவி கமிஷனர்கள் கவிதா பிரியதர்சினி, தனபால் தலைமையில் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் உள்பட 30 அதிகாரிகள் ராஜபாளையம் வந்தனர். வணிக நிறுவனங்கள் அமைந்து இருந்த ஆக்கிரமிப்பை அகற்றினர். பூட்டியிருந்த கடைகளுக்கு சீல் வைத்தனர். அறநிலையத்துறை இடங்களில் கல் ஊன்றி, முள்கம்பி வேலி அமைப்பதற்கான ஏற்பாடுகளை, மாயூரநாதசுவாமி கோயில் நிர்வாக அதிகாரி அறிவழகன் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !