உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேனி மாவட்டத்தில் மகா சிவராத்திரி வழிபாடு

தேனி மாவட்டத்தில் மகா சிவராத்திரி வழிபாடு

தேனி: மகா சிவராத்திரியை முன்னிட்டு,நேற்று இரவு தேனி மாவட்டத்தில் உள்ள கோயில்களில், சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. தேனி பெத்தாட்ஷி விநாயகர் கோயிலில் உள்ள சோமாஸ்கந்தருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.நேற்று இரவு 8 மணி, நள்ளிரவு 12 மணி, அதிகாலை 2, 4 மணி ஆகிய நேரங்களில் சிவனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்களின் பஜனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. மேலும், பெரும்பாலான கிராமங்களில் இருந்து, குடும்பத்துடன் சென்று குலதெய்வ வழிபாடு நடத்தினர். இதனால், தேனி-மதுரை ரோட்டில் பாலம் வேலை நடைபெறும் இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பெரியகுளம்: பெரியகுளம், தாலுகா பகுதிகளில் மகா சிவராத்திரியை முன்னிட்டு, நூறு கோயில்களில் குலதெய்வம் வழிபாடு நடந்தது. வெளியூரில் வேலைக்கு சென்றவர்கள் பலர், பெரியகுளம் பகுதியில் உள்ள தங்கள் குலதெய்வங்களை குடும்பத்துடன் வந்து சாமிகும்பிட்டனர். பாசிபயறு, துவரைபயறு, சுண்டல், மொச்சை, தட்டை உட்பட ஐந்து வகை பயறுகளை அவித்து, படையலிட்டு வழிபட்டனர். சச்சுமடை பாண்டிகோயிலில் சிறப்பு பூஜை செய்து, அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !