உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பண்ணாரியம்மன் கோவில் குண்டம் விழா: பூச்சாட்டுடன் துவக்கம்!

பண்ணாரியம்மன் கோவில் குண்டம் விழா: பூச்சாட்டுடன் துவக்கம்!

சத்தியமங்கலம்: பண்ணாரி மாரியம்மன் கோவிலில், இந்த ஆண்டுக்கான குண்டம் விழா, பூச்சாட்டுடன் துவங்கியது. ஈரோடு மாவட்டம், பண்ணாரி மாரியம்மன் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும், பங்குனி உத்திரம் நட்சத்திரம், அடுத்து வரும் செவ்வாய் கிழமை, குண்டம் விழா நடப்பது வழக்கம். இந்தாண்டு குண்டம் விழா, நேற்று முன்தினம் இரவு, 11:30 மணிக்கு, பூச்சாட்டு நிகழ்ச்சியுடன் துவங்கியது. நேற்று இரவு, நித்தியப்படி பூஜை முடிந்து, பண்ணாரி அம்மன் வீதியுலா நடந்தது. 11ம் தேதி இரவு, கம்பம் சாட்டும் நிகழ்ச்சி, 18ம் தேதி அதிகாலை, 4:00 மணிக்கு, தீ மிதி நிகழ்ச்சி, 21ம் தேதி, விளக்கு பூஜை மற்றும் 24ம் தேதி, மறுபூஜையுடன், குண்டம் விழா நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !