உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்போரூரில் நாளை மாசி கிருத்திகை விழா

திருப்போரூரில் நாளை மாசி கிருத்திகை விழா

திருப்போரூர்: திருப்போரூர் கந்த சுவாமி கோவிலில், மாசி கிருத்திகை நாளை நடைபெறுகிறது.
திருப்போரூர் கந்த சுவாமி கோவிலில் மாசி கிருத்திகை திரு நாளையொட்டி, நாளை அதிகாலை 3:00 மணிக்கு, கோவில் நடைதிறக்கப்படுகிறது. இரவு 11:00 மணி வரை நடை திறந்திருக்க, கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. பாரிமுனை, அடையாறு, தாம்பரம் பகுதியில் இருந்து திருப்போரூருக்கு 30 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !