உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழனி மாரியம்மன் கோயிலில் திருக்கல்யாணம்!

பழனி மாரியம்மன் கோயிலில் திருக்கல்யாணம்!

பழநி: பழநி மாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவின், முக்கிய நிகழ்ச்சியான அம்மன் திருக்கல்யாணம் நடந்தது. பழநியில் மாரியம்மன்கோயில் மாசித்திருவிழா நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம், மங்கள வாத்தியங்கள் முழங்க, புனிதகலசங்கள் வைத்து நேற்று இரவு நடந்தது. அதைத்தொடர்ந்து அம்மன் தங்ககுதிரை வாகனத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று மாலை 4.30 மணிக்கு மேல் தேரோட்டம் நடக்கிறது. இரவு 10 மணிக்கு வாண வேடிக்கையும், அதிகாலை 3 மணிக்கு திருக்கம்பத்தை கங்கையில் சேர்த்தல் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !